ரூ.15,000 விலையில் உலக அளவில் ஃபேமஸ் ஆன புதிய CMF Mobile

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ் மீது ஒரு பிராண்ட் கவனம் செலுத்தியுள்ளது என்றால் அது CMF ஆக மட்டுமே இருக்க முடியும். நத்திங் நிறுவனத்திற்கு சொந்தமான சிஎம்எஃப் பிராண்ட் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) சாதனம் கழட்டி மாட்ட கூடிய பேக் கவர் உடன் வருகிறது. இனி போனின் நிறம் பற்றிய கவலையே வேண்டாம்.

 


சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1): இனி உங்கள் விருப்பம் போல, தோன்றும் நேரத்தில் எல்லாம் சிஎம்எஃப் போன் 1 நிறத்தை நீங்கள் நொடியில் மாற்றிக்கொள்ளலாம். அதேபோல், இத்துடன் நிறுவனம் லான்யார்ட் கேபிள் (lanyard cable), ஸ்டாண்ட் (stand), மற்றும் பேக் வாலெட் (back wallet) போன்ற அக்சஸரீஸ் சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. சிஎம்எஃப் போன் 1 சாதனத்தை வெறும் போனாக மற்றுமில்லாமல், CMF நிறுவனம் பல பரிமாணங்களில் அதன் புதுமையை புகுத்தி நம்மை திகைப்படைய செய்துள்ளது.

 50MP+50MP+12MP Camera போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் சிஎம்எஃப் போன் 1 ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடலான 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 8GB ரேம் + 1258GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 17,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் வரும் ஜூலை 12, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.

 

இந்த புதிய சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் விற்பனை CMF இந்தியா வலைத்தளம், ரீடைல் கடைகள் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகையின் ஒரு பகுதியாக, முதல் நாள் விற்பனையின் போது மட்டும் வாடிக்கையாளர்கள் சிஎம்எஃப் போன் 1 போனின் விலை மீது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடியை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 Oppo A60 உடன் 6.67-இன்ச் LCD திரை, Snapdragon 680 SoC அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜூலை 12, 2024 ஆம் தேதி வரை பொறுத்திருக்க முடியாதவர்கள் ஜூலை 9, 2024 ஆம் தேதி இரவு 7 மணி முதல் பெங்களூரு லூலூ மாலில் உள்ள வளாக கடையிலிருந்து சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) போனை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

 

சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) போனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அக்சஸரீஸ் சாதனங்களின் விலை பற்றி பேசுகையில், இந்த போனின் பேக் கவர் ரூ.1,499 விலை முதல் வாங்க கிடைக்கும். இது ஆரஞ்சு, பிளாக், ப்ளூ மற்றும் லைட் க்ரீன் நிறங்களில் கிடைக்கும். இது தவிர மற்ற மூன்று அக்சஸரீஸ் சாதனங்களும் ரூ. 799 விலையுடன் வாங்க கிடைக்கும். CMF இன் 33W சார்ஜ்ர் ரூ. 799 விலையில் வாங்க கிடைக்கும்.

 

சிஎம்எஃப் போன் 1 சிறப்பம்சம் (CMF Phone 1 Specifications):

- 6.67" இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே (display)

- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)

- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 chipset)

- 8GB வரை ரேம் (RAM)+ 128GB ஸ்டோரேஜ்

- 2TB மைக்ரோஎஸ்டி மெமரி (microSD memory)

- 50MP + 2MP டூயல் கேமரா

- 16MP செல்பி கேமரா

- 33W பாஸ்ட் சார்ஜிங்

- 5,000mAh பேட்டரி

 

 


Previous Post
No Comment
Add Comment
comment url

Menu