ரூ. 8 ஆயிரத்துக்கு 8GB ரேம், 50MP மொபைல் ஆஹ்!
டெக்னோ நிறுவனம் இப்போது புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ ஸ்பார்க் 20C என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் 20C மாடலில் 6.6 இன்ச் HD+ டாட்-இன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
Tecno Spark 20C சிறப்பு அம்சங்கள்
6.56” HD+ 90Hz டிஸ்ப்ளே
8GB மெமரி ஃப்யூஷன்
MediaTek Helio G36 சிப்செட்
8GB ரேம் + 128GB சேமிப்பு
8MP AI செல்ஃபி கேமரா
50MP+AI லென்ஸ் இரட்டை கேமரா
18W சார்ஜிங்
5,000mAh பேட்டரி