Motorola Flexible Mobile இப்போது வந்தாச்சு புதிய வகை வளையும் மொபைல்
2024-லில் மோட்டோரோலா நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட்போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் வடிவம் மற்றும் இதில் உள்ள வசதியின் காரணமாக பென்டபில் எனும் புது வகையை உருவாகியுள்ளது..
பென்டபில் என்கிற இந்த ஸ்மார்ட்போன் கேட்பதற்கு கற்பனையாக இருக்கும் ஆனால் இதில் உள்ள பல செயல்பாடுகள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வகை மாடல் பயனர்கள் தங்களின் போனினை இதுவரை இல்லாத அளவுக்கு மாற்றி கொள்ளலாம்.
இதனை வழக்கமான ஸ்மார்ட்போன் போன்றும் மற்றும் வேறு வடிவத்திற்கு மாற்றியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிநவீன வளையும் தன்மை கொண்ட Display ஸ்மார்ட்போனை கையில் கட்டி கொள்ளும் வகையில் வளைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இருந்து ஸ்மார்ட்வாட்ச் ஆக மாறிவிடும்.
இந்த ஸ்மார்ட்போன் பல வடிவங்களில் வளைக்க முடியும் என்பதால், எந்த வடிவத்தில் இருக்கும் போது. இதில் உள்ள செயலிகள் சீராக இயங்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.